சில நிகழ்வுகள்
சில நிகழ்வுகள்
வீசும் காற்று
எங்கிருந்தோ
கொண்டு வருகிறது
மலரின் மணத்தை
பொழியும்
மழை துளிகள்
கிளப்புகிறது
மண்வாசனை
தேங்கும் நீரில்
அரை நொடிக்குள்
அழகாய் வண்ணம்
தீட்டுகிறது
நீர் குமிழ்கள்
கருப்பு மேகங்கள்
கண்ணீரை
கொட்டி அழ
சுற்றி வந்து
கொண்டிருக்கிறது
இதன்
அழுகைக்கு
பயந்துதானோ
சூரியன் எங்கோ
போய்
ஒளிந்து கொண்டு
விட்டான்