காதல் விளையாட்டு

காதல் விளையாட்டை
விளையாட ஆரம்பத்தில்
எல்லோருக்கும்
ஆர்வமாக இருக்கும்...!!

சில நேரங்களில்
விதிகளை மீறி
விளையாடினாலும்
தவறாக எண்ணாது
காயங்கள் ஏற்பட்டாலும்
காதல் மனதிலே
வலி தெரியாது....!!

காலம் செல்ல செல்ல
காதல் விளையாட்டில்
ஏற்படும் சிறு தவறுகளும்
காதல் மனதிலே
பெரிய காயங்களை
உண்டாக்கி
ஆறாத வடுக்களாக
மாறி விடுகிறது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Nov-22, 6:46 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal vilaiyaattu
பார்வை : 224

மேலே