தண்ணீர் விரையம்

நேரிசை ஆசிரியப்பா

உயிரைக் காத்திட கொடுத்தனன் பரமன்நீர்
அதற்கு செலவிட்டேன் பணத்தை தண்ணீராய்
இதற்கும் செலவிட்டேன் பணத்தை தண்ணீராய்
எனவாய் கூசா சொல்வையோ மூடனே
அறிவீலி தண்ணீரும் பணமும் சமமென
ஒப்பிடல் முறையோ வாழுமுயிர்க் கெதுவெண்டும்
வரளும் நாவிற்கு தாகம் வந்திட
குடிப்பனோ பணத்தை தண்ணீர் நல்ல
தண்ணீ ரன்றோ காக்குமுயிர் ஆக
சொல்வீர் பணத்தை விரையம் செய்தேன்
என்றது பொருந்தும் இனியும்
சொல்லாய் தண்ணீராய் செலவிட்டேன் என்றுமே



....

எழுதியவர் : பழனி ராஜன் (7-Nov-22, 8:21 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 82

மேலே