தவறுடை யாப்புமே தானுந் தந்திடல் - கலி விருத்தம்

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(1, 3 சீர்களில் மோனை)

கவியெனச் சந்திரன் கசிந்து பாடிடும்
அவரசப் பாட்டெலாம் அனைத்துங் குற்றமே!
தவறுடை யாப்புமே தானுந் தந்திடல்
நுவலுவேன் மொத்தமும் நொய்ய துன்பமே!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Nov-22, 7:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே