ஆசை

தேனி போல
சிறுக சேமித்து வாழவே ஆசை.
காகமாய் இருந்து
கழுகாய் பறக்க நினைத்ததில்லை.
உண்மை கொண்ட
ஒரு நட்பு போதும்.
சுற்றி கதைக்க
கூட்டம் விரும்பவில்லை.
அன்பு செய்ய
ஓர் குடும்பம் போதும்.
குற்றம் காணும் நெஞ்சங்கள் தேவையில்லை.
நான் நானாக வாழவே ஆசை.
பிறர் கனவின் சிலையாய்,
கல்லாய் மடிய நானில்லை.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 1:25 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : aasai
பார்வை : 50

மேலே