சேத்துப்பட்டு வேண்டாம் போதும் செங்கல்பட்டு
பதினான்கு வயதினில் அரும்பியது என் வாலிப மொட்டு
பதினெட்டு வயதில் சிந்தியது இனிய காதல் தேன்சொட்டு
ஒருநாள் என் பார்வையில் சிக்கியது இளங்கன்னிச்சிட்டு
மறு நாள் என்னைச் சூடேற்றியது கன்னியின் உடல்கட்டு
பலநாள் கனவில் என்னை ஆதரித்தாள் அவள் உடல் பட்டு
கன்னியைக்காண அலைந்தேன் திரிந்தேன் சேத்துப்பட்டு
நான் வசிப்பதோ கூடுவாஞ்சேரிக் கடந்து செங்கல்பட்டு
ஆனால் கன்னி பாராமல் சென்றாள் எனை விட்டுவிட்டு
கண்ணீரின் கனமழையில் இறங்கினேன் ரயிலைவிட்டு
வெளியில் வந்தவுடன் இடறி விழுந்தேன் செங்கல் பட்டு
இனியும் காதலிக்க மாட்டேன், கூறுகிறேன் மனம்விட்டு
புளித்தது சேத்துப்பட்டு மெய்யாக இனிப்பது செங்கல்பட்டு