கவிதையின் சந்தங்களில் கனவுகள் நடந்திடும் போது

கவிதையின் சந்தங்களில்
கனவுகள் நடந்திடும் போது
கற்பனையில் வானவில் கோலம் போடுது
அந்தக் கற்பனைக் கோலங்களில்
உன் காதல் முகமே தெரிகிறது

கவிதையின் சந்தங் களில்கனவு கள்நடக்க
கற்பனையில் வானவில் கோலங்கள் போடுது
அக்கற்ப னைக்கோல மெல்லாமும் காண்கிறேனுன்
காதல் எழில்முக மே

எழுதியவர் : கவின் சாரலன் (30-Nov-22, 7:26 pm)
பார்வை : 56

மேலே