செந்தமிழ்த் தேன்மொழியாள்

செந்தமிழ்த் தேன்மொழியாள்..
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

செந்தமிழ்த் தேன்மொழியாள் சினந்தால் எரிமலையாம் /
மந்திரப் புன்னகையாள் மகிழ்ந்தால் பனிப்பொழிவாம் /

அன்பையும் அறத்தையும் அகத்தே கொண்டவளாம்/
மின்னலைக் கதிரொளி மேனியைப் பெற்றவளாம்/

புன்னகை ஒன்றினால் புவியினைக் கவர்ந்தவளாம் /
என்னையும் விழிகளின் வீச்சினில் வென்றவளாம் /

பிறவிகள் ஏழுமென் பின்னே தொடர்பவளாம் /
துறவியாய் யாவையும் எனக்கெனத் துறந்தவளாம் /

அவளே எந்தன் அனைத்துமாய் ஆனவளாம் /
சிவனின் உமையாய் என்னுள் இணைந்தவளாம் //

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (30-Nov-22, 9:09 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 111

மேலே