மனையாளியிருக்க மற்றொன்றை நாடாதே

எயிட்ஸ் இடி
*************
கட்டுக் கடங்காதக் காமக் களியாட்டம்
கெட்டப் பயலாக்குங் கேள்
*
சுடுகாட்டிற் குன்னைச் சுகமா யனுப்பி
விடும்நோ யுணர்ந்தே விலகு
*
பூப்போல் மனையாள்தன் பொன்மேனித் தேனிருக்கத்
தீப்போல் தெருமகள் தீங்கு
*
சொற்ப நிமிசச் சுகந்தேடி நீகொள்ளும்
தொற்றுக் கிலையே மருந்து
*
எயிட்ஸ்நோய்க் கிருமியை ஏற்கா துடம்பைப்
பயிற்சிக்குள் வைத்துப் பழக்கு
*
கெட்டப் பெயர்வாங்கிக் கேவலமாய் வாழ்வதிலும்
துட்டதொன் றில்லை யுனக்கு
*
அந்தரங்க ஆசையில் ஆபத்தை வாங்கியே
தொந்தரவில் வீழ்வதோ தூ
*
வீட்டின் வெளியே விலைமாது விற்பதைக்
கேட்டுபெறச் சூழுமே கேடு
*
நல்லவர் போர்வையில் நாயாய் அலைந்திடும்
எல்லோர்க் குமெயிட்ஸ் இடி
*
வழித்துணை வந்தார் வழங்கும் பிணியெடுத்து
வாழ்க்கைத் துணைக்கீதல் வம்பு
*
*மெய்யன் நடராஜ்
#Dec-1 சர்வதேச எயிட்ஸ் தினம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Dec-22, 2:56 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 73

மேலே