காதலின் வெற்றி
காதலின் வெற்றியென்பது
திருமணத்திலோ
சேர்ந்து வாழ்தலிலோ
ஒருவருக்கொருவர் காதலைப் பரிமாறிக் கொண்டு புன்னகைத்துக் களிப்பதிலோ மட்டும் உணரப்படுவதில்லை
சூழ்நிலைகளால் பிரிந்தாலும்
காலங்கள் கடந்தாலும்
உன்னுள் நானிருப்பதை சொல்லாமல் சொல்லும் உனது செய்கைகளில்தான்
எனது காதலின் வெற்றியென்பது
கொஞ்சம் அதிகமாகவே உணர்கிறேன்