தனிமை
கூட்டமாய் கூடி வாழ்ந்ததால்
இப்போது
குடியிருக்கும் தனிமை என்னை
சுடுதே.
சிறகை விரித்து பறந்ததால் இங்கு
சிறகொடிந்து நிற்கும் தனிமை சுடுதே
சுற்றம் சூழ வாழ்ந்ததால் என்னைச்
சற்றும் திரியும் தனிமை சுடுதே
குழுக்களோடு சேர்ந்து
கொண்டாடியதை புலனக்
குழுவில் கொண்டாடும் தனிமை
சுடுதே
அனைத்து சொந்தங்களும் கூடி
மகிழ்வதை
அயல்நாட்டிலிருந்து ரசிக்கும் தனிமையே சுடுதே....