அவன்
மரங்கள் வேருடன்
சாய்ந்தது,
பதாதைகளை கிழிந்து
போனது,
கடலலை எல்லை
தாண்டியது,
படகுகள் அலைகளில்
மூழ்கியது,
தொலைபேசி கோபுரங்கள்
நிலையிழந்தது,
மின்கம்பங்கள் அறுந்து
போனது,
இரவு முழுவதும்
கண்விழித்தது மழை ,
இறுதியாய் புயல்
கரையையும் கடந்தது ,
விடியும் முன்
கிளம்பினான்,
விடிய விடிய
விழித்திருந்து,
வீதி வீதியாய்
செய்தி தாள் போடா,
என்றோ ஒரு நாள்
விடியும் என்ற நம்பிக்கையில்
நடை வீதியில் வாழும்
அவன்....
#அவன்
#சிபூ
#கவிதை