மெல்லிடை அசைந்து அல்லியாய் தாமரையாய்
அல்லியும் தாமரையும் அழகில் விரியும் நிலவில் கதிரில்
மெல்லிடை அசைந்து அல்லியாய் தாமரையாய் அழகினில் வருமுனை
கல்லில் வடித்திட எந்தச் சிற்பக் கலைஞனும் முன்வருவான்
சொல்லில் வடித்திடும் நானோ சொற்சிற்பி நானென்ன விதிவிலக்கா ?