குடியழிய குடி உயரும்

குடியழிய குடி உயரும்
******
கள்ளமுது ஆக்கமுற கன்னமது
பின்னமுற பெண்ணமுதின் சோகமதுவே !
உள்ளமது குடலேற உள்ளமது
தடுமாற வெள்ளமது இல்லமதிலே !
இல்லமதன் கனியமுது பிள்ளைதனை
கொல்லுமது பந்தமதை யறுக்குமதுவே !
இல்லமது சிறப்புறவும் இருக்குமது
ஒழிந்திடவும் வழிகாட்டு சக்தியவளே!!
******
(மனதில் தோன்றியதை இயல்பான
வரிகளில் பதிவு செய்துள்ளேன்.
இது யாப்பு வழி ஓரளவாவது உள்ளதா
அல்லது முற்றிலும் தவறாக உள்ளதா
என யானறியேன்.
சொற்கள் மறந்து விட்டால் என் செய்வது
என்பதால் உடனே பதிவு செய்துவிட்டேன்
யாப்பு ஆர்வலர்கள் மன்னிக்கவும்.
முக்கியமாக மருத்துவர் கன்னியப்பன் ஐயா
அவர்களும் திரு பழனிராஜன் ஐயா அவர்களும் மன்னித்து அருள வேண்டும்.
நன்றி

எழுதியவர் : சக்கரை வாசன் (27-Dec-22, 7:29 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 48

மேலே