338 கயவரைச் சார்வதால் கணக்கிலாத் தீமையாம் - தீயரைச் சேராமை 7

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

கயவரைச் சேர்ந்தவன் கலந்த போதவர்
செயலினை யெண்ணுவன் தினஞ்செ லச்செல
மயன்மிகுந் தவர்செயன் மகிழ்ந்த னுட்டிப்பன்
இயவரைச் சேர்தல்போல் இல்லைத் தீமையே. 7

- தீயரைச் சேராமை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”கீழ்மக்களைச் சேர்ந்தவன் சேர்ந்த பொழுது அவர் செயலை இழிவாக நினைப்பான். நாட்கள் செல்லச் செல்ல மிகவும் மயங்கி அவர் செயலை மகிழ்ந்து அவனும் செய்வான்.

ஆதலால், கீழ்மக்களைச் சேர்தல்போல் பெருந்தீமை வேறொன்றும் இல்லை” என்கிறார் இப்பாடலா சிரியர்.

கயவர் - கீழ்மக்கள். தினம் - நாள். இயவர் - கீழோர்.
அனுட்டிப்பன் - அவனும் செய்வான், மயன்மிகுந்து - மையல் மிகுந்து

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jan-23, 2:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே