ஒருவர் மனத்தை ஒருவர் அறிய - எழுசீர் ஆசிரிய விருத்தம்
எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 4 / மா மா காய்)
(1, 5 சீர்களில் மோனை)
ஒருவர் மனத்தை யொருவ ரறிய
..உள்ளஞ் சொல்லக் கேட்போமே;
ஒருவர் பொறையு மிருவர் நட்பா
..முண்மை யதுதா னென்போமே!
கருத்திற் றோன்று மெண்ணம் யாவுங்
..கவனங் கொள்ளல் நன்காமே;
விரும்பும் நல்லோர் வெள்ளை யுள்ளம்
..வெல்லுஞ் சொல்லைப் போற்றுவமே! 1
– வ.க.கன்னியப்பன்