220 அரியது நிகழினும் கொலை செய்பவர் உயர்தல் அரிது – கொலை 7
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
பவமற மாயினும் பவர்க்க முத்தியாய்ச்
சிவமுறப் பொலியினுஞ் சிதைந்த ழிந்தவோர்
சவமுயிர் மேவினுந் தகையில் காதகர்
அவனியி லுயர்ந்திட லரிது நெஞ்சமே. 7
– கொலை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நெஞ்சமே, செய்த பாவம் புண்ணியமாக மாறினாலும், இருளுலகம் ஒளியுலகமாய்ப் பேரின்பமுடன் விளங்கினாலும், வெட்டுண்டு மாண்டு அழிந்த பிணம் மீண்டும் உயிர்பெற்று வாழ்ந்தாலும் கொலை செய்பவர் இவ்வுலகில் உயர்ந்து மேன்மை எய்துதல் மிகவும் முடியாதது ஆகும்” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
பவர்க்கம் - நரகம்; இருளுலகம். சிவம் - பேரின்பம்.
முத்தி – ஒளியுலகம், சொர்க்கம்.
காதகன் - கொலைஞன்.