பகாபதம்

இரவின் சாலையில் இவனா என பயத்துடனேயே உடன் வருகிறாய்.

ஒரு காமத்திற்குப் பிறகான பிரிந்த நினைவுகளின் பகாபதங்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதில்லை.
இருவரில் ஒருவரேனும்
தற்போது உரசிக்கொள்ளாத விரல்களுக்கென
பொய்ப் பெயர்களைச் சூட்டி சென்றிருக்கலாம். விட்டுவிட்டோம்

ஒரு நிசப்ததைக்குள்
காலாவதியாகிவிட்ட நம் செல்லப் பெயர்களின் வாய்ப்பட்டியல்களை
நம் இருவருடைய நா நுனிகளிடம் பரிமாறிக் கொண்டிருந்தது காற்றுத்தூளி.

உன் உணர்விருக்கும்போது நினைவுகளிடமோ
இங்கீதம் துறக்கும்போது நாக்குகளிடமோ
என்றாவது ஒருநாள்
வரக்காத்திருக்ககும் அவைகள்.

யாரிடம் சொல்லிப் பார்ப்பாதாய்
உன் உத்தேசம் .

நம்மை ரசித்த நம் கண்களிடம்
நம் பிரிவினை சொல்லிவிடு
எதிர்ப்பார்த்தே காத்திருக்கும்
அந்த ஏக்கவிழிகளிடம்
ஒரு நாடகம் சொல்லிக்கொடு

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (22-Feb-23, 3:07 am)
பார்வை : 40

மேலே