அவள் ஒரு முடிவில்லா பயணம் -8

இப்படியே போக ஒரு இரண்டு மூன்று நாள் அப்படியே சென்று கொண்டிருக்கிறது அவள் எங்கு வேலைக்கு போகிறார் என பார்க்க வேண்டும் என அவள் பின்னாடியே ரவி வருகிறான் வந்து பார்த்தால் ஒரு பெரிய கம்பெனியில் கார்த்திகா வேலைக்கு போகிறாள் என தெரிகிறது யார் வாங்கி கொடுத்தது என்று தெரியலையே என ரவி சொல்கிறான் கதிர் கார்த்திகாவை மறந்து விட்டான் பாரதியிடம் பேச வேண்டும் எப்பொழுது பேசலாம் எப்படி பேசலாம் என நினைத்துக் கொண்டு இருக்கிறான் இந்த சமயத்தில் அவளுக்கு இன்னும் ஒரு பத்து பதினைந்து நாட்களில் பிறந்தநாள் வருகிறது அப்பொழுது அவளுக்கு நம் பிறந்தநாள் பரிசாக நம் காதலை அவளிடம் சொல்ல வேண்டும் என நினைக்கிறான் கதிர் இப்படி இருக்க கார்த்திகாவின் கணவன் வீட்டில் கார்த்திகாவை அதிகம் பேசுவது திட்டுவது அடிப்பது என முடிந்தவரை துன்புறுத்துகிறான் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு அவள் வேலைக்கு வருவது போவதும் என இருக்கிறாள் இப்படி இருக்க கதிர் இங்கு பாரதி கோசம் அவள் பிறந்தநாள் பரிசாக அவருக்கு ஒரு புடவை எடுக்கிறான் அவளுக்கு தெரியாமலே எடுத்து வைக்கிறான் ஒரு மோதிரம் வாங்குகிறான் இது எல்லாம் அவன் எடுத்துக்கொண்டு போய் அவளுக்கு தெரியாமல் வீட்டுக்குள் மறைத்து வைக்கிறான் அவளும் அதை எதுவும் பார்ப்பதும் இல்லை என்ன என்று எதுவும் கேட்பதும் இல்லை எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என நம்புகிறாள் நாட்கள் சென்று கொண்டிருக்க கார்த்திகாவின் கணவர் நன்றாக குடித்துவிட்டு கார்த்திகா வேலை செய்யும் கம்பெனிக்கு வருகிறார் வந்து நான் கார்த்திகாவை பாக்கணும் என சொல்கிறார் அதற்கு அங்கிருக்கும் வாட்ச்மேன் அதெல்லாம் பார்க்க முடியாது நீ கிளம்பி போ என சொல்கிறார் என் பொண்டாட்டி வேலை செய்றா நான் அவளை பாக்கணும் அவ பேரு கார்த்திகா வர சொல்லுவியா என தகரரு செய்கிறார் வாட்ச்மேன் எவ்வளவு சொன்னாலும் கேட்கவில்லை அவரையே அடித்து விடுகிறான் அடித்துவிட்டு உள்ளே போகிறார் எங்கடி இருக்க வாடி வெளியே என கத்துகிறான் கம்பெனியில் இருக்கும் வேலையாட்கள் எல்லோருமே ஒரு மாதிரியாக ரவியை பார்க்கிறார் ஏனென்றால் நன்றாக குடித்துவிட்டு அவருக்கு என்ன செய்கிறோம் என்பதே தெரியவில்லை இவர் கத்திக் கொண்டே இருக்கிறார் ஒருவர் மேடம் மேடம் உங்களை ஒருவர் வரச் சொல்லிக் கூப்பிட்டு கொண்டு இருக்கிறார் நன்றாக குடித்துவிட்டு வந்திருக்கிறார் அவர் யார் என தெரியவில்லை கம்பெனியில் வேலை செய்யும் நபர் சொல்கிறார் ஓகே சார் நான் வரேன் என கார்த்திகா வந்து பார்த்தால் ரவி நன்றாக குடித்துவிட்டு ஏன் கார்த்திகா எவண்டி உனக்கு இங்க வேலை கொடுத்தது இவன்தான் உன் லவ்வரா இந்த கம்பெனி வச்சிருக்கான் அதனாலதான் நீ என்கிட்ட உண்மையா இல்லாம இருக்கியா என தப்பு தப்பாக பேச ஆரம்பிக்கிறான் மேனேஜர் வந்து பேசுகிறார் யார் சார் நீங்க உங்களுக்கு என்ன பிரச்சனன சார் இப்படி எல்லாம் பேசாதீங்க எந்த பிரச்சனையா இருந்தாலும் நீங்க வெளியே வச்சுக்கோங்க இங்க எல்லாம் வேலை செய்றாங்க என மேனேஜர் சொல்கிறார் எங்க எதுக்குங்க இங்க வந்தீங்க என்னங்க உங்களுக்கு பிரச்சனை நிம்மதியா நான் ஒரு வேலைக்கு வந்தா கூட என்னை விட மாட்டீங்களா வாங்க எதா இருந்தாலும் நம்ம பேசிக்கலாம் வெளியே யார் உனக்கு வேலை வாங்கி தந்தது சொல்லு இல்ல இந்த கம்பெனி ஓனர் தான் உன் லவ்வரா இவன வச்சுக்கிட்டு தான் நீ இப்படி பண்ணிக்கிட்டு திரியறியா சொல்றேன் நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டடி நம்பி நான் ஏமாந்துட்டேன்டி என வாய்க்கு வந்தது போல் உளறுகிறான் கார்த்திகா உடனே அங்கிருக்கும் மேனேஜர் எம்டி இடம் சொல்கிறார் அவரும் வந்து என்ன எது என பார்த்தால் இவன் மிகவும் மோசமானவனாக தெரிகிறான் இவனிடம் நாம் எதுவும் பேசக்கூடாது என உடனே நீ கதிருக்கு போன் செய் என சொல்ல கதிர் வேலை செய்து கொண்டிருக்கிறான் ஹலோ சார் வணக்கம் நாங்க அரவிந்த் சார் கம்பெனியில் இருந்து மேனேஜர் பேசுறேன் நீங்க கார்த்திகா என்ற பொண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்தீங்க தானே அவரோட கணவர் வந்திருக்கார் குடிச்சிட்டு ரொம்ப தப்பு தப்பா பேசி அசிங்கமா இருக்கு சார் நீங்க வந்து என்ன ஏதுன்னு பாருங்க என்ன சொல்கிறார் மேனேஜர் அதைக் கேட்டதும் கதிருக்கு எதுவும் புரியவில்லை சரி என உடனே கதிர் கிளம்பி வருகிறான் வந்து பார்த்தால் கார்த்திகாவை ரோட்டிலே அடிக்கிறான் அடித்து விட்டு மிகவும் தப்பு தப்பாக பேசுகிறான் கம்பெனியில் வேலை செய்பவர்கள் ரோட்டில் நடந்து செல்பவர்கள் என எல்லோரும் பார்க்க அவள் கேவலப்படுத்துகிறான் இதை கதிர் தூரமாக நின்று கொண்டு பார்த்து மனதில் மிகுந்த வேதனை அடைகிறான் எப்படி இருந்தவர்களின் வாழ்க்கை இன்று இப்படி வீதியில் சிரிக்கிறது என நினைத்து அவன் கண்களில் கண்ணீரே வந்து விட்டது அவள் கீழே விழுந்து எழுந்து அவர் கணவனை அழைத்துக்கொண்டு அழுது கொண்டே போகிறாள் அதை பார்த்து கதிரின் மனம் கண்ணாடி போல் உடைந்து விட்டது சந்தோஷமா இருக்கிறாள் என நினைச்சேன் கடைசியில் இப்படியா பட்ட குடிகாரனை கட்டிக்கிட்டு இப்படி அவஸ்தை படுறாளே இப்படி கஷ்டப்படுறது என கதிரின் மனம் கலங்க ஆரம்பித்தது அது தாங்கிக் கொள்ள அவனால் முடியவில்லை அப்படியே வீட்டுக்குப் போகிறான் வீட்டில் போய் இருந்தாலும் இந்த நினைவையே அவனை வந்து வந்து நிம்மதியை கெடுக்கிறது இது எப்படியாவது மறக்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறான் ஆனால் அவனால் மறக்க முடியவில்லை ஏனென்றால் கார்த்திகாவும் கதிரின் காதலும் அப்படிப்பட்டது இருவரும் அவ்வளவு காதலித்தனர் ஆனால் காலம் என்ற கொடுமை அவர்களை பிரித்து விட்டது வேலைக்கு மறுநாள் வருகிறவன் தன் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாமல் மிகவும் தவிக்கிறான் அதை எப்படியாவது மறக்க வேண்டும் என குடிக்க ஆரம்பிக்கிறான் கதிர் குடிக்க ஆரம்பிக்கிறான் கதிர் முதல் நாள் கொஞ்சமாக குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறான் ஒரு மாதிரியாக தட்டு தடுமாறி வருகிறான் அதை பார்த்த பாரதி என்ன ஆனது இவருக்கு ஏன் இப்படி இருக்கிறார் என்ன பிரச்சனை என தெரியவில்லையே என பக்கத்தில் போனால் ஒரு வாடை வருகிறது அவள் எதுவும் கேட்கவில்லை சரி என சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என கேட்கிறாள் அவன் நேராக பொய் கட்டிலில் படுத்துக் கொள்கிறான் சாப்பிடவில்லை சரி காலையில் பேசிக்கொள்ளலாம் இப்பொழுது அவர் ஓரு மாதிரியாக இருக்கிறார் என பாரதி விட்டு விடுகிறாள் இப்படியே இருக்க கொஞ்சமாக ஆரம்பித்த குடி அவன் மனதில் ஆழமாக பதிந்து விட்ட கார்த்திகாவின் வாழ்க்கை அதை நினைத்து நினைத்து இவன் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது குடி என்ற கொடுமைக்காரன் இவனை கொல்ல ஆரம்பிக்கிறான் குடி குடி என குடிக்க கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து விட்டான் வேலைக்கு போகிறேன் என போனாலும் வேலை செய்ய முடியாமல் கார்த்திகாவின் நினைவிலேயே வாழ ஆரம்பிக்கிறான் அவள் எங்கிருக்கிறாள் அவள் எப்படி இருக்கிறாள் அவளை பார்க்க வேண்டும் என அவன் மனதில் அதையே ஓட்டம் ஓடுகிறது அதனால் அவன் வேலைக்கு போய் பாதினால் விடுமுறை என வந்து விடுகிறான் வந்து பஸ் ஸ்டாண்டிலே காத்துக் கொண்டிருக்கிறான் இப்படியே நாட்கள் செல்கிறது காலையில் எழுந்து வேலைக்கு என கிளம்புபவன் போக போக வேலையை விட்டுவிட்டு காலையிலே குடிக்க ஆரம்பிக்கிறான் குடித்துவிட்டு பஸ் ஸ்டாண்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறான் அவள் எங்கிருக்கிறாள் அவளை எப்படி பார்ப்பது என ஒவ்வொரு இடமாக தேடுகிறான் திரும்பவும் அரவிந்த் கம்பெனிக்கு போய் பார்க்கலாம் எனப் போகிறான் அரவிந்தின் மேனேஜர் சார் யார் சார் அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு சார் ஆனால் அவரோட கணவர் ரொம்ப மோசமானவர் ரொம்ப அந்த பொண்ணை கேவலப்படுத்திட்டார் சார் அன்னைக்கு போனவங்கதான் இது வரைக்கும் அவங்க வேலைக்கு வரல என சொல்கிறான் சரி என கதிர் வெளியே வருகிறான் அவளைப் பார்க்க வேண்டும் அவர் எப்படி தான் இருக்கிறான் என தெரிய வேண்டும் என நினைத்துக் கொண்டே பஸ் ஸ்டாண்டிலேயே வாழ்க்கையை தொலைக்கிறான் பாரதியின் பிறந்தநாளை கூட மறந்து போகிறான் அவருக்கு பிறந்தநாள் பரிசு வாங்கி வைத்ததையும் கொடுக்கவில்லை அவளுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை பாரதியின் மீது வந்த காதல் போன இடம் தெரியவில்லை அவளைப் பற்றிய நினைவு கொஞ்சம் கொஞ்சமாக மறக்கிறான் மறந்துவிட்டு கார்த்திகா கார்த்திகாவின் நினைவில் மட்டுமே வாழ்கிறான் கார்த்திகாவின் வீட்டில் கார்த்திகா பட்ட அவமானம் அவளால் தாங்க முடியவில்லை இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டுமா வேலை எதுவும் இல்லை வீட்டில் போட்டு நன்றாக அடித்து விடுகிறான் ரவி அவளால் எழுந்து நடக்க கூட முடியவில்லை அதை தன் அம்மா அப்பாவிடம் சொல்லவும் அவளால் முடியவில்லை இதற்கு மேல் நாம் வாழக்கூடாது என கார்த்திகா முடிவு செய்கிறாள் ஆனாலும் நம் குழந்தையை என்ன செய்வது என யோசிக்கிறாள் சரி இதற்கு மேல் நாம் வாழ கூடாது என இவ்வளவு கேவலமாக நம்மளை பேசி விட்டான் நாம் அவ்வளவு பெரிய தவறு ஒன்றுமே செய்யவில்லையே ஒருத்தரை காதல் செய்தது அவ்வளவு பெரிய தவறா? அந்தக் காதலன் மறந்துவிட்டு இவனுக்காக உண்மையாக வாழ்ந்தது தவறா? குழந்தை பிறந்தது அதுவும் தவறா என பல கேள்விகள் அவள் மனதுக்குள் ஓடுகிறது சரி என என்ன செய்கிறான் வீட்டில் இருக்கின்ற விஷத்தை எடுத்துக் குடித்து விடுகிறாள் குடித்துவிட்டு இதற்கு மேல் நம் உயிரோடு இருக்கக் கூடாது குழந்தைக்கும் கொடுத்து விடலாம் என நினைக்கிறாய் ஆனால் குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு அவளால் முடியவில்லை முதலில் அவள் குடித்து விடுகிறார் குழந்தைக்கு கொடுக்க அவளுக்கு மனம் வரவில்லை குழந்தையை கொல்ல.

தொடரும்...

எழுதியவர் : தாரா (15-Mar-23, 12:17 am)
சேர்த்தது : Thara
பார்வை : 110

மேலே