பட்டம்
பட்டம்.
கவலைகள் மறந்திட
சிறுவன் அவன்,
பட்டங்கள் பல விட்டு
பார்த்தே மகிழ்ந்திடுவான்.
பாவி அவள் (அம்மா)
அதை அறுத்தே
மகிழ்திடுவாள்.
காலங்கள் கரைந்திட,
அவன் தந்தை அளித்த
கரம் பிடித்தே,
இளைஞன் அவன் தப்பியே
ஓடிவிட்டான்.
ஓடிய இடத்திலும் ?
அவன் மதியோ
அல்ல அவன் விதியோ !
இன்னோருத்தி,
அவன் வாழ்வில் குறுக்கிட்டாள்,
பாவம் அவன்!
குறுக்கிட்ட அவள்
அவன் மனக் கோட்டைகளை
உடைத்து விட்டாள்,
இப்போ அவன் பட்டம்
விடுவதே இல்லை.]
ஆக்கம்
சண்டியூர் பாலன்