தம்பி உடையான் கட்சி மாற அஞ்சான்
அண்ணே, நம்ம கட்சில இரண்டாம் கட்டத் தலைவராக பல வருசமா இருக்கிறீங்க. உங்களுக்கு பேச்சுத் திறமை இல்லாததாலா நம்ம கட்சி பொதுக் கூட்டங்களில் பல இடங்களுக்கும் சென்று பேசி பணம் சம்பாதிக்கவும் வழியில்லை.
@@@@@
என்ன செய்யலாம்? நீயே சொல்லு.
@@@@@@
இல்ல. ஒரு பணக்கார கட்சிலிருந்து சிலர் வந்து எங்கிட்ட பேசினாங்க. நம்ம மாவட்டத்தில் உங்களுக்கு நல்ல செல்வாக்கு இருக்குது. அந்தக் கட்சில சேரப் சொல்லி உங்களை அழைக்கிறாங்க. நீங்க அந்தக் கட்சில சேர்ந்தா ஒரு பங்களா, பயணிக்க கார் எல்லாம் தருவாங்க லாம். ஒரு வாரம் பேச்சுப் பயிற்சி தந்து உங்களை மிகச்சிறந்த பேச்சாளராக மாத்திடுவாங்கலாம். விதவிதமாக பொய் பேசறது பற்றி பயிற்சி தருவாங்கலாம். எதிர் கட்சசிக்காரங்களப் பத்தி அவதூறு வதந்தி பரப்பறதப் பத்தியும் சிறப்பான பயிற்சி தருவாங்கலாம். வழக்கு போட்டா அதைக் கட்சி பாத்துக்குமாம். மாதச் சம்பளம் அஞ்சு இலட்சம். உதவிக்கு முனைவர் பட்டம் பெற்ற இரண்டு செயலாளர்கள் இருப்பார்களாம். நம்ம மாவட்டத்தில் உள்ள தொகுதிகளை எல்லாம் வெற்றிக் கனியாக்கிஅந்தக் கட்சி வசமாக்கணுமாம். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்யணும். என்ன அண்ணே