மான்விழி மென்பார்வையால் நீ

உருளும் விழிகள் மதுத்திராட்சைத் தோட்டம்
உருண்டிடும் முத்துக்கள் பேசும் இதழ்கள்
மருளாத மான்விழிப் பார்வையில் நேசம்
புரிகிறாய் ஏதோமா யம் !

உருளும் விழியில் உதிரும் திராட்சை
உருண்டிடும் முத்துக்கள் உண்மை இதழ்கள்
மருளாத மான்விழி மென்பார்வை யால்நீ
புரிகிறாய் மாயம்அன் பே

எழுதியவர் : கவின் சாரலன் (26-Apr-23, 9:52 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 84

மேலே