உன்னில் ஒருபாகம்

உன்னில் ஒருபாகம்...!
--------------------
உன்னை கொஞ்சம் நான் கொஞ்ச
நீ மிஞ்சும்போது நான் கெஞ்ச
உன் பிஞ்சுவிரல் பிடிக்க நான் ஏங்க
என் நெஞ்சம் நிறைந்து நீ பொங்க
உன் பஞ்சுமடியில் நான் தலைசாய்க்க
வந்த வஞ்சியே உன் தலை வருட
மலர் மஞ்சம் நுழைந்து நித்தம்
உனை தஞ்சம் அடைந்தேன் நான் வாழ...
கண்ணில் தெரியுதே ஒரு மின்னல்
என்னைத் தாக்கி ஒளிக்குதே ஜன்னல்
வாய்மொழி தித்திக்குதே கன்னல்
என்னை கட்டிப்போடுதே உன் பின்னல்
ஜதிகள் போடுதே உந்தன் நடை
ஒடிந்து விழுந்திடுமோ உந்தன் இடை
ஓயாது தாக்கிடுதே இளம் படை
கலர்கலராய் விரியுதே உன் கடை
விழியில் கலங்குதே ஒரு சோகம்
துளித்துளியாய் விழுதே கருமேகம்
ஏன் நடுங்குது உன் தேகம்?
கலங்காதே நானிருக்கிறேன் உன்னில் ஒருபாகம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (27-May-23, 10:20 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 110

மேலே