கருணாநிதிககு நூற்றாண்டு விழா

வெள்ளைக் காரன் சட்டம் போட்டு
கள்ளுச் சாரா யத்தை தந்தான்
ராஜா ஜீவந்து அரக்கு டன்கள்
ளையும் நீக்கி னான்பார்...
கள்ளை நீக்கி யதுயார் பேனா?

மீண்டும் முப்பத் தேழில் நாட்டின்
தண்டல் வசூல் பற்றாக் குறையு
தென்று வெள்ளைக் காரன் திரும்ப
கள்ளை தந்தான் குடிக்க
நல்லவன் அழிந்தே போனான் இங்கே

மீண்டும் மதராஸ் ஓமந்தூ ரான்கை
மீண்டும் சேர நாற்பத்தி நாலில்
கொன்றான் மதுவிலக்கை சட்டம் போட்டு
மீண்டும் ராஜாஜி காம ராஜர்
பக்த வச்சலம் எனவும் காங்கிரஸ்
ஆட்சி யில்கள் இல்லை
அண்ணா கூடக்கள் வேண்டா மென்றானே

கலைஞர் வந்ததும் கலைத்தான் குடிகளை
குலைத்தான் நாட்டின். சீரொழுக் முடனே
நல்லறம் வருடம் முப்பது இல்லா
சாரா யத்தை கொண்டு வந்த
கருணா நிதியை போற்றி
மெய்கீர்த்தி கவிதை நாம்பாடி ஆடுவோமே

போது மென்று பொருளை யவனொரு
போதும் விட்ட தில்லை போதாக்
குறைக்கு குரைக்கும குடும்பம் சேர்க்கும்
கோடி கோடி எங்கு வைத்தார்
குக்கலும் குலைக்காத் தூங்க தந்தான்
போதை வஸ்துடன் பொருளும் இலவசம்


போதை வந்து கொலையுடன் திருட்டு
கற்பழிப்பு நடத்தும் ஆட்சி யாளர்.
நாட்டை கொள்ளை செய்து நியாயம்
பேசி உண்மையை ஒழித்தான்.இன்று
வெள்ளையன் மறைந்து கொள்ளையர் பரவி
மக்கள் மூளையை மயக்க மூடராகித்
திரிய நல்லவர் நடுங்கிச்
முடங்கிப் போன தைப்பார் நீயே

கலைஞர் என்ன கம்பனா கீரனா
காவியம் படைத்த பாரதியா என்ன
குறளுக் குரையை முன்னூற் றொன்றாம்
ஆளாக எழுதிய பெருமையா ? குறளுடை
முதலதி காரமாம் கடவுள் வாழ்த்தில்
பாடல் பத்தில் ஏழில் பாமரர்
பிறப்பு நீங்கிட கடவுள் பாதஞ்
சேர்ந்திட வழியை வள்ளுவன் சொன்னான்
கடவுள் வாழ்த்திற்கு கருணா நிதியின்
உரையை பாருங்கள் உளறல் வேறென்ன
கடவுள் சொல்லை காணாத் தூக்கியே
கடவுளைக் கொன்றான் பாவி
காலனே கலியுக இரண்யனும் இவனே


கடையில் கள்ளை விற்க கள்ளச்
சாரா யத்தை கண்மணி விற்றார்
சாராயம் தடுக்கா சைடில் பிசினஸ்
பேரா பத்தில் பலரும் சாக
பேரிடர் எனப்பத்து லட்சம் தந்தான்
பேராசை பிடித்த பேயும் மக்களின்
பணத்தை கள்ளச் சாராயம் விற்ற
பாவிக் குந்தந்தார் பெருமை காதலில்
பேனா வேணாம் மதுவின்
பேரல் வைத்து மெய்க்கீர்த்தி பாடுமே

எழுதியவர் : பழனி ராஜன் (5-Jun-23, 10:43 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 39

மேலே