உலக கடல் தின கவிதை
*இன்று உலக கடல் தினம் அது பற்றி ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் நண்பர்களே*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
*உலக கடல் தின*
*சிறப்பு கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
இந்த உலகத்திலேயே
முதல் உயிரைப்
பெற்றெடுத்த
முதல் அன்னை....!
பூமி உலகில்
தண்ணீர் வலிமையால்
அதிக நாடுகளை
வென்று
தனக்கு
அடிமையாக்கிக்
கொண்ட
மகுடம் சூடா மன்னன்.... !
உலகத்தில்
கடல் இருப்பது
எல்லோருக்கும் தெரியும்.....
ஆனால்
கடலுக்குள்
ஒரு உலகம் இருப்பது
எத்தனை பேருக்குத்
தெரியும் ?
கடல்கன்னி
கடற்கரைக்கு வரும்
எந்த ஆண் மகனை
காதலித்தாளோ...?
அடிக்கடி
அனுப்பி வைக்கிறாள்
அலையிடம்
தூது சொல்லி.....
குடும்பத்திற்குச்
சோறு போடுவதே
பெரும்பாடாக
இருக்கின்ற
இந்தக் காலத்தில்....
இது எத்தனையோ
குப்பத்துக்கு மட்டுமல்ல
உலகத்திற்கே
உணவு அளிக்கிறது.....!
நாட்டுப்
பொருளாதார மேற்கூரையே!
இதனால்தான்
தூக்கி நிறுத்தப்படுகிறது....!
புழு முதல் திமிங்கலம் வரை
பனிமலை முதல் எரிமலை வரை
முத்து முதல் பவளம் வரை
கட்டுமரம் முதல் கப்பல் வரை நிறைந்திருக்கும்
அருங்காட்சியகம்.......!!!
மேகங்களை
உற்பத்தி செய்யும்
தொழிற்சாலை....
கண்டங்களை
இணைக்கும் பாலம்...
ஆக்சிஜன் உற்பத்தியில்
மரத்துக்கு
அடுத்தப்படியாக
இரண்டாம் இடம் பிடித்த
நிறுவனம்
இதுவே.....!
சீற்றம் வராதவரை தான்
சீதையைப் போல்
அமைதியாகவும்
அழகாகவும் இருக்கும்....
கடுங்கோபம் கொண்டால்
கண்ணகி போல்
மதுரையை மட்டுமல்ல
இந்த பூமியையே
அழித்தாலும் அழித்துவிடும்....
தன்னை நோக்கி
ஓடி வரும்
ஆறு நதிகளுக்கு
அடைக்கலம் தரும்
எட்டாவது வள்ளள்....!
கடல் நீர்
உப்புக்கரிப்பதற்கான காரணம்
விஞ்ஞானம் சொல்வது
ஒன்று இருந்தாலும்....
கடல் மாசடைவதை
எண்ணி
கடல்வாழ் உயிரினங்கள்
வடித்தக் கண்ணீரால்தான்
கடல் நீர்
அதிகமாக உப்புக் கரிக்கிறதோ..?
கடல் வாழ்
உயிரினங்களை
வேட்டையாடுகிறது
நெகிழிக் கழிவுகளும்...
கடல் வாழ்
உயிரினங்களை
அணு அணுவாக
கொன்று கொண்டுள்ளது
தொழிற்சாலை கழிவுகளும்...
பனிமலை
உருகுவதால் மட்டும்
கடல் நீர் மட்டம்
உயரவில்லை....
குப்பத்து மக்களின்
கண்ணீராலும் தான்
உயர்ந்து கொண்டிருக்கிறது....
"உப்பிட்டவரை
உள்ளளவும் நினை"என்று
நம் முன்னோர்கள்
சொன்னார்கள்....
ஆனால்
நாம்
உண்ணும் போது கூட
நினைப்பதே இல்லை...!
கடலை
ரசிக்க மட்டுமே
செய்கின்ற நாம்
இனியாவது
கடலை நேசிப்போம்.....!
கடல்வாழ் உயிரினங்களை
பாதுகாப்பது எப்படி
என்பதை வாசிப்போம்....!
கடற்கரைக்குச் சென்று
பொழுதை மட்டுமே
கழிப்போம்....!
அதன் தூய்மையை
அழிக்காமல் இருப்போம்..!
இவன்
கவிதை ரசிகன்