நிழல்

நீ என் ஸ்பரிசம் உணர்ந்திருக்கிறாயா ?
ஆனால் நான் உன் ஸ்பரிசம் உணர்ந்திருக்கிறேன்.
காமத்தால் அல்ல
வெளிச்சத்தினால்.
வெளிச்சத்தில் மட்டும் என்னுடன் வரும் நீ
இருளில் ஏன் காணாது போகிறாய் ?
உனக்கு வெட்கமா ?
நீ உன் அன்யோன்யத்தால் என்னை ஆட்கொள்கிறாய்
நான் நிரந்தரமற்றவன்
நீ ஏன் என் பூத உடலுடன் சிதையேறுகிறாய் ?

நிழல்

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (9-Jun-23, 10:57 am)
Tanglish : nizhal
பார்வை : 54

மேலே