உனக்காகத் தானே என் உயிர்

உனக்காகத் தானே என் உயிர்
___________________________

உனக்காகத் தானே
உயிர் மீண்டேன் /
உதிரத்தில் உருவாக்கி
உறவின் கிளையாக /

உயிர் தந்தேன்
உலகை ஆண்டிட/
கற்பூரமாகக் கரைந்து
கரு சுமந்து/

தன்னை உருக்கி
ஒளி தரும் /
மெழுகுவர்த்தியின் தியாகமாக
அன்பால் உருகுகின்றேன் /

கோழியைப் போன்று
சிறகில் மூடி/
தவமாய்த் தவமிருந்து
தன்னிலை மறந்து/

எந்நாளும் காக்கிறேன்
எள்ளளவும் துன்பமின்றி /
பாறையாகத் தேய்கிறேன்
பாசத்தை காட்டியே /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (14-Jun-23, 6:19 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 361

மேலே