உரிய அரிய புத்தகங்கள் உனக்கும் ஏற்ற ஆசான்கள் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
மரபுக் கவிதை எழுதுதற்கே
..மரபுக் கேற்ற இலக்கணங்கள்,
இருளை நீக்கும் இன்னிசைவில்
..இனிதே கற்றுத் தேறிடவே,
உரிய அரிய புத்தகங்கள்;
..உனக்கும் ஏற்ற ஆசான்கள்,
மருளை நீக்கிக் கற்றிடுவீர்
..மாண்பு மிகவும் பெறுவீரே!
- வ.க.கன்னியப்பன்