குறுங்கவிதைகள்
அ.
தமிழ்மொழி
செம்மொழி என்பதை
உணர்ந்தேன்
உன்
செவ்வாய் வழி
தெறித்து விழுந்த
வார்த்தைகளால்...!
ஆ.
உன்
இதழ்களால்வெளிப்படும்
வார்த்தைகள் கேட்டு
உதிர்ந்து விட்ட பூக்களும்
உயிர்கொள்கின்றன...!
இ.
உன்
புன்னகை காணாத
வானவில்லும்
சாயம் வெளுத்து
சாய்ந்து கிடக்கிறது
வானில் வண்ணங்களற்று...!