லதா கிறிஸ்டி 22052023
அறிவைப் பகிர நினைத்ததில்
டி ஆர் டி ஓ இவரது வசம்...
அன்பைப் பகிர நினைத்ததில்
இயேசு கிறிஸ்து இவரது நேசம்...
அவர் டாக்டர் லதா கிறிஷ்டி..
இறைவனின் அற்புத சிருஷ்டி..
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
கவி பாடும்..
கிறிஸ்டி வைத்திருக்கும்
எழுதுகோலும் அறிவியல் பேசும்..
ஆராய்ச்சியில்
இவர் எதிர்பார்க்கும்
விஞ்ஞான முடிவுகள்..
இவரது ஞானம் கண்டு
வெள்ளைக்கொடி ஏந்தி
நாடி வரும்.. ஓடி வரும்...
மின்னணுவியல்.. தொடர்பியல்
ஏரோ ஸ்பேஸ் மூன்றும்
இவருக்கு மா பலா வாழை..
இவரது
மயிலிறகு.. பூந்தென்றல்
எழுத்துக்கள்.. பேசும் உரைகள்
இனிய இன்பச் சோலை...
சமூக நலன் விசாரிக்கும்
இவரது புத்தகங்களில்
சிலுவைகள் சுமக்கும்
வார்த்தைகள் சிறகுகள் தரும்..
இவர் இந்திய தேசத்தின்
டாப் டென் ரக விஞ்ஞானி..
அக அமைதி சொல்லும் மிக அழகிய மெஞ்ஞானி..
டாக்டர் லதா கிறிஸ்டி.. இவர்
கற்றனைத் தூறும் அறிவு
திருக்குறளின் விலாசம்..
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே
பெண் இளைப்பில்லை..
பாரதி வரிகளின் முகவரி..
அடுத்த முறை இவரைப்
பார்க்கும்போது எழுத
ஒரு பேனா கேட்பேன்..
எனக்கும் விஞ்ஞானம்
வருமா என்று பார்ப்பேன்..
லதா கிறிஸ்டி...
வசந்த வாழ்த்துகள்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள்..
🪷🌷👏👍