1980 களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா

80' களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா..

9 ஆம் நாள் திருவிழா மற்றும் நையான்டி மேளம்..

9 ஆம் நாள் திருவிழா மாலை 4.00 மணிக்கெல்லாம் ஆரம்பித்துவிடும் நாதசுவரம் நையான்டி மேளக் கலைஞர்களின் இன்னிசை நடைபெறும்..
இரு நாதசுவரம், இரு தவில்களும் முதன்மை இசைக் கருவிகளாகவும், பம்பை, உறுமி, கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, கோந்தளம், ஒரு சுதிப்பெட்டி, ஒரு தாளம் போன்ற இசைக் கருவிகள் பயண்படுத்தி இசைக்க உள்ளம் கொள்ளை போகுமே..

கலைஞர்களின் உடையலங்காரமும் முகப் பூச்சுமே பார்வையாளர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டும். அதிகமான முகப் பூச்சு, பளபளப்பான ஜிகினா உடை,கை விரல்களில் பெரிய மோதிரம்,கழுத்தில் செயின்கள் என கதாநாயகர்கள் போன்ற தோற்றத்தில் அசத்துவார்கள்

முதலில் மங்கள இசை .அடுத்து பக்தி பாடல்..அடுத்தாக முக்குலத்தோரின் தேசியக் கீதமான..அமரன் படத்தில் நவரசநாயகன் கார்த்திக் அவர்கள் பாடிய

போட்டாலே விறுவிறுக்கும்

அமரன் கானா பாட்ட கேட்டாலே
கிறுகிறுக்கும் மச்சி

நான் வெத்தல போட்ட
சோக்குல போடு

வெத்தல போட்ட சோக்குல
நான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல
அட வந்துது பாரு ரத்தம்
இந்த அமரன் மனசு சுத்தம்

இந்தப் பாட்டு நாதசுரத்தில் ஒலிக்க ஆரம்பித்தவுடன் சிறுசு முதல் சாகப் போர கிழடு வரைக்கும், ஆடாத காலும் ஆட வைத்து விடுவிடுவார் இசைக்கலைஞர்கள்..

அமரன் பாட்டு சும்ம நச்சுனு வாசித்து அசத்திய கலைஞரின் நாதசுவரம் முழுவதும் ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய்,ஐந்து ரூபாய் தாள்கள் ஊரார் அன்பளிப்பாக ஊக்கு வைத்து கோர்த்திருப்பார்கள்..

80 களில் 1 ,2,5 ரூபாய்கள் அதிகமாக பழக்கத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

அடுத்தாக தேவரின் புகழ் பாடல் வாசித்தவுடன் மற்ற நடிகர்கள் பாடல்களை வாசிப்பார்கள்...

சாமியாடிகளை தாலட்டு வாசிப்பில் வாசிக்க சாமி வந்து ஆட ஆரம்பிப்பார்கள்..

தொடரும்....

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (30-Jul-23, 5:50 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 48

மேலே