உறவின் உன்னதம்

உறவின் உன்னதம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

உறவுகள் பலவிதம்
உலகில் எங்குமில்லை/
குறைவில்லாப் பாசத்தில்
குடும்பங்களாக மகிழுமே/

நட்புகள் துணையாக
நாட்புறச் சுற்றமும்/
கூட்டாகப் பகையாயினும்
கூடவுறவுப் பலமாகுமே/

விழுதாகித் தாங்கிடும்
வீழ்ந்திடும் போதெல்லாம்/
விழாவில் ஒன்றுகூட
விருந்தோம்பல் சிறக்குமே/

மூத்தோர் கதைகளில்
முற்பாலும் கற்றோமே/
முத்திய நோயாவும்
முறிந்தன கைவைத்தியத்தாலே/

அன்பெனும் வலையிலே
அகப்பட்டோம் சொந்தமாக/
பண்பென்றப் புள்ளியில்
பலவகையில் உன்னதமே/

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (31-Aug-23, 5:24 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 124

மேலே