ஆனந்தம் நிலைக்குமே

ஆனந்தம் நிலைக்குமே
======================

காலமெனும் கடலில்
வாழ்க்கைப் படகினில்
பயணிக்கும் நாமெலாம்
சந்திப்பவை எத்தனை !

சுழன்றிடும் சூறாவளியாய்
எதிர்வரும் துன்பங்களும்
எதிர்பாரா நிகழ்வுகளும்
வரிசையில் நின்றிடுமே !

இடையிடையே இன்பங்கள்
இல்லத்தில் மகிழ்ச்சியும்
இன்னல்களை மறந்திட
வருவதும் வாடிக்கைதான் !

அனைத்தையும் சந்திக்கும்
ஆற்றலும் இருந்திட்டால்
அமைதியும் கிட்டிடுமே
ஆனந்தம் நிலைக்குமே !

மனதினை வலிமையுடன்
பிணியில்லா தேகமுடன்
வாழ்ந்திட வழிமுறைகளை
வகுத்து வாழ்ந்திடுக !!!

பழனி குமார்
30.08.2023

எழுதியவர் : பழனி குமார் (30-Aug-23, 1:13 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 26

மேலே