எதிர்பாரா மரணங்கள்

பிறபபின் இறுதி
இறப்பு உறுதி !
எழுதாத தீர்ப்பு
இதற்கேது மறுப்பு !
மரணம் நிகழ்வது
மண்ணில் நிச்சயம் !
இமைக்கும் நேரத்தில்
இதயம் நின்றிடும் !
விழிகள் மூடிடும்
வாழ்வு முடிந்திடும் !
அகால மரணத்தால்
கண்ணீர் பெருகிடும் !
கற்பனைக் கதைகள்
நரகம் சொர்க்கம் !
கனவில் தோன்றுவது
நனவில் நடப்பதில்லை !
நிறைவேறா ஆசைகள்
நிரம்பிடும் நெஞ்சில் !
நாளும் காண்கிறோம்
எதிர்பாரா மரணங்கள் !
எதிர்நீச்சல் பழகிடுங்கள்
எதையும் தாங்கிடுங்கள் !
இயற்கையின் வழியில்
தொடர்வோம் வாழ்வை !
ஆழ்ந்த இரங்கலுடன்
இதயத்தின் அஞ்சலி !


பழனி குமார்
08.09.2023

எழுதியவர் : பழனி குமார் (9-Sep-23, 7:41 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 103

மேலே