சாலையோர பூக்கள்

சாலையோர பூக்கள்
@@@@@@@@@@@

கோடிஷ்வரன் வாகனம் உருண்டு ஓடும் /
தெருக்கோடியில் உண்டு வாழும் ஏழைமக்கள் /

மாடிவீட்டு பிள்ளைகள் மறந்தாச்சு நிலாச்சோறு /
சாலையோர பிள்ளைக்கு நிலவொளியில் சோறு /

பஞ்சு மெத்தை தூக்கம்மில்லை இழப்புக்கு /
பொருளில்லை கர்ப்பை தவிர பாதுகாக்க /

வண்டியின் ஓலிதரும் தாலாட்டில் தூங்குகின்றன /
பச்சிளங்குழந்தை நடைமேடையில் சாலையோர பூக்களாய் /

முதல்வரும் மந்திரியும் அடுத்தடுத்து மாறிட்டாங்க /
தெருவோர மக்கள் வாழ்க்கைமட்டும் மாறல /

சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (1-Oct-23, 5:49 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : saalaiyora pookal
பார்வை : 100

மேலே