வண்ண வண்ண மலர்கள்

வண்ண வண்ண மலர்கள்
×××××××××××××××××××××××
சின்னதாகச் சிரிக்கையிலே
அன்னமது அழகின்
கன்னமதில் குழிவிழ
வன்ன மலர்களே

அன்பால் நாட்பானோர்
அர்ச்சுனான் சகோதரர்களே
வண்ணம்(வர்ணம்) பார்க்காது
வகுப்புத் தோழமையிடமே

அரும்பான மழலை
எறும்பாக கூடியாடுவர்
கரும்பாக இனித்திடுவர்
கனிவானப் பேச்சிலே

பகுந்து உண்பதில்
பாசமுள்ளக் காக்கைகளே
வகுத்துச் சொன்னால்
வசந்தம் அவர்களே

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (3-Oct-23, 9:13 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 78

மேலே