தடைகளைத் தகர்த்திடு

தடைகளைத் தகர்த்திடு

💪💪💪💪💪💪💪💪💪

தயக்கம் வேண்டாம் தடைகளை
உடைத்திடு /

உடைத்திடு பழைமையின் உளுத்த
விதிகளை /

விதிகளை மாற்றிடு விந்தைகள்
பிறந்திடும்/

பிறந்திடும் நாட்டினில் பேணிடு
சமத்துவம் /

சமத்துவம் சுதந்திரம் சகோதரத்துவம்
ஓங்கட்டும் /

ஓங்கட்டும் உயர்ந்ததோர் ஒப்பில்லா
சமுதாயம் /

சமுதாயம் உம்மையே சரணென்று
பணிந்ததே /

பணிந்ததே காத்திடு தயக்கம்
வேண்டாம் /

-யாதுமறியான் .

எழுதியவர் : -யாதுமறியான். (18-Oct-23, 2:12 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 534

மேலே