கதிரவன், நிலவோடு உரையாடல்
நிலவே என்னொளியில் ஒளிர்கிறாய்நீ
உலகிற்கு இரவெல்லாம் தன்னொளி பரப்பி
உலகத்தார் உன்னைப் போற்றி புகழ
என்னிலைப் பார்த்தாயோ நீ, மண்ணில்
உயிர்வாழ்ந்திட ஒளிதந்தும் கடல்நீரை
மழைநீராய் வாரி வாரி வழங்கியும்
' இவன் வாட்டும் கதிரவன்' என்றேதான்
தூற்றுகின்றார் எப்போதும் பழிச்சொல்லால் என்னை
என்னென்பேன் என் விதியை நீசொல்லாய் நிலவே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
