விவேக சிந்தாமணி - காப்பு

விவேக சிந்தாமணி ஒரு பழைமையான தமிழ் நீதி நூலாகும். இது அனுபவ மூதுரைகளைக் கொண்ட தமிழ் செய்யுள் தொகுப்பாகும்.

இந்த நூலின் ஆசிரியர் யார் என்றும், நூல் இயற்றப்பட்ட காலம் குறித்த விவரமும் தெரியவில்லை. நாயக்கர் காலத்தில் இந்த நூல் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தனிப்பாடல்களைத் தொகுத்து இந்நூல் உருவாகி யிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. இந்நூல் தொகுப்பில் 135 பாடல்கள் உள்ளன.

காப்பு
நேரிசை வெண்பா

அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னைவயிற் றில்பிறந்த
தொல்லைபோம்; போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

எழுதியவர் : (30-Oct-23, 10:08 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே