செவத்தக்காரனும் சிகப்பியும்
"சிகப்பி நல்ல சிகப்பிதான்
சிகப்பு தோலு சிகப்பிதான்
செங்கா நெல்லு சிகப்பிதான்
சிரிக்கும் சொல்லு சிகப்பிதான்
செவத்தக்காரன் வந்தாரய்யா
சிகப்பியத்தான் கவுப்பாரய்யா
ஊரெல்லாம் ஒன்னு சேர்ந்து
கல்யாண ஊர்கோலம் போக வைக்கும்
சின்ன ஓலை குடிசைக்குள்ள
சீதனங்கள் கொட்டிக் கிடக்குது
சீதை கணக்கா சிகப்பி நிக்குறா
தன்னோட குணத்த சொல்லி தலைகுனிஞ்சு பார்க்குறா
சிங்கப்பல்லு சிங்காரி
தங்க ரத இடையான ஒய்யாரி
செவத்தனுக்கு இது ஏத்த ஜோடி தான்
சேர்ந்து வாழ்த்துவோம் ஒன்னு கூடிதான்"