வாழட்டும்

அழகாக இருக்கிறாள்
பொட்டும் பூவும் மெட்டியும்
அவளின் அழகுக்கு அழகு கூட்டுகிறது
தெளிவான தொலைநோக்குப் பார்வையில் நடக்கிறாள்
ஊரார் முகம் சுளிக்கிறார்கள்
புருஷன் போயி சேர்ந்துட்டான்
இவளோட அலங்காரத்தை பாரு...
ஏன்..
என்ன தப்பு
அவளுக்கு இன்னும் இவ்வுலகில் வாழப் பிடித்திருக்கிறது
வாழட்டும்.. விரும்பினால்
மறுமணமும் செய்துக் கொள்ளட்டும்
சாஸ்திரங்களையும் சடங்குகளையும்
தூக்கி எறியுங்கள்
மாறட்டும் விதவைகளும் சுமங்கலிகளாக...
.

எழுதியவர் : கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ் (4-Nov-23, 8:07 am)
Tanglish : vaalatum
பார்வை : 251

மேலே