மாலை மழை
இரவும் பகலும்
இணையும் நேரம்!
மாலை நேரம்
மழை தூவும் மேகம்!
காதல் கலக்கம்
அவள் மீது ஒரு மயக்கம்!
சொட்டு சொட்டை
பெய்த வாண் மழை!
இன்னும் மலராத
தாமரை!
அவள் மட்டும் என்
அருகில் தோழியாக!
காதலை கூறி
காதலி நீ என்னை
உன்னை என் காதலி என்று
நானும் சொல்ல!
காதலி நீ என்னை
என்றும் சொல்ல ஆசைதான்!
காதலை சொன்னால் எங்கே
அவள் தோழன் என்ற
உறவும் பரி போகுமோ என்ற
அச்சம்!
நித்தம் அவளை
பார்பதே என் சித்தம்!
மழையும் நின்று போக
அவளும் முழுதாய் நினைந்திருக்க!
அவளை நினைத்தே மழையில்
நான் நினைவதை மறந்தே விட்டேன்!