நேரு
நேரு
×××××÷
விஞ்ஞான கோவிலில் அறிவை தேடு /
வெறுமனே ஆன்மீகத்தை பேசிட வேண்டாமென்றார்/
பசியால் பரிதவிக்கும் ஏழைகளுக்கு கடவுள்/
பொருட்டல்ல அவர்களுக்கு தேவை உணவென்றார்/
இந்தியா பசியும் பட்டினியும் மலிந்த/
இந்நாட்டில் மக்கள் சோற்றுக்கே அல்லாடும் /
மக்களிடம் சத்தியம் கடவுள் அருட்செல்வம்/
மறுவாழ்வு பற்றி பேசுவது கேலிக்கூத்தென்றார்/
அவர்களுக்கு உணவு உடை உறைவிடம்/
அறிவுச்செல்வம் நல்வாழ்வு மக்களுக்கு தேவையென்றார்/
விஞ்ஞான அறிவும் தொழில் நுட்பமுமே /
வளர்ச்சிக்கு சாதிக்கும் என்று அறிவுறுத்தினார் /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்