வாசிக்க நினைக்காத மனம்
வாசிக்க நினைக்காத மனம்
தினம் தினம்
மனதோடு
போராடுகிறேன்
அருகருகே
வாசிக்க நூலும்
பொழுதை கழிக்க
செல்போனும்
மனம் என்னவோ
ஆலாய் பறந்து
செல்போனையே
தேடுகிறது
எடுத்து பார்த்தவன்
நேரம் கழித்து
களைத்து பார்க்கையில்
வாசிக்க வைத்த
நூல்
வாசிக்கவில்லையே
என்னை
ஏக்கமாய்
பார்த்தபடி…!