நன்மதி வெண்பா - நூல் - பாடல் 4
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
வாய்திறந்தோ ரின்சொல் வழங்காது மௌனியாய்
வாய்மகிபன் றன்மை வழுத்துங்கால் - நோய்கொள்
செவிகேளான் கண்விழியான் தேர்நன் மதியே
சவமவனென் றேதுணிந்து சாற்று! 4