சிறு கட்சிகள் ஏலம்
சிறிய கட்சிகள் கூட்டமைப்பு தலைவர்:
@@@@@@@@@@@@@
நமது உறுப்பினர் கட்சிகள் ஒவ்வோரு தேர்தலிலும் கூட்டணி பற்றி முடிவு செய்வது மிகவும் கடினமாக உள்ளது, எனவே புத்தாண்டு பிறந்ததும் பெரிய கட்ட்சிகளிடம் நமது கட்சிகளை ஏலம் எடுக்க அழைப்பு விடுக்கவேண்டும். ஏதாவது ஒரு கூட்டணியில் நிலையாக இருப்பதற்கும் பெரிய தொகையை பெறுவதற்கும் நல்ல வாய்ப்பாக இது அமையும்.
மட்டை ஆட்ட (கிரிக்கெட்) வீரர்களை ஏலம் விடுகிறார்கள். இதை உலகம் ஏற்றுக் கொண்டது. நாம் நமது கட்சிகளை ஏலம் விடுவதில் என்ன தவறு? நாட்டின் வலிமைக்கு வலிமையான ஆளுங்கட்சி, வலிமையான எதிர்கட்சியும் தேவை. எனவே நமது முடிவு உலக நாடுகளில் உள்ள சிறு கட்சிகள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.
நமது சிறு கட்சிகளின் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அறிவிப்பை செய்தியாளர் கூட்டத்தில் ஜனவரி முதல் நாளன்று புத்தாண்டுப் பரிசாக பொது மக்களுக்கும் பெரிய கட்சிகளுக்கும் அறிவித்து விடுவோம்.