குலோத்துங்க சோழன் கோவை - நூல் - இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.
அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க.
அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்;
அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு
முன்னிலை யாக்கல்.
(இ-ள்) தலைவிநிற்பது தன் காரியத்திற்குவேண்டுங் காரணமென்றெண்ணி அவளைத் தலைமகன் முன்னிலையாக்கி மொழிதல்.
கட்டளைக் கலித்துறை
மெய்யா னதுவியர் வாகுமென் றோவிளை யாட(ல்)செய்வீர்
கையா னதுசிவப் பேறுமென் றோமலர் காவி(ற்)கொய்யீர்
சையா சலப்பொன்னி நாடன் குலோத்துங்கன் றஞ்சையுன்னீ
ருய்யானந் தன்னி லொருபாவை போனிற்ப தோதுமினே! 7