காற்றே கவிதையில் கண்ணன் புகழ்பாடு

காற்றே கவிதையில் கண்ணன் புகழ்பாடு
ஆற்றின் அலைகளே ஆடு யமுனைபோல்
கண்ணனின் வேய்ங்குழலே காதலிசை யைப்பாடு
கண்ணெழில்ரா தைவருவாள் பாரு

------இருவிகற்ப இன்னிசை வெண்பா

காற்றே கவிதையில் கண்ணன் புகழ்பாடு
ஆற்றின் அலைகளே ஆடு யமுனைபோல்
தூற்றும் மழைச்சாரல் போல்குழல் பாட்டிசைக்க
காற்றில் குழலாட காதலில்ரா தைவருவாள்

----பல வாய்ப்பாடு அடிகளில் பொலிந்து வர அமைந்த கலிவிருத்தம்


காற்றேநீ கவிதையினில் கண்ணன்தன் புகழ்பாடு
ஆற்றின்பூ அலையெல்லாம் ஆடுங்கள் யமுனைபோன்று
தூற்றிடும்பூ மழைச்சாரல் போல்குழலில் பாட்டிசைக்க
காற்றினிலே குழலசைய காதலில்ரா தைவருவாள்

----முற்றிலும் காய் அமைய மாற்றிய கலிவிருத்த வடிவம்

காற்றேநீ கவிதையினில் கண்ணன்தன் புகழ்பாடு
ஆற்றின்பூ அலையெல்லாம் அசையுங்கள் யமுனைபோன்று
தூற்றிடும்பூ மழைச்சாரல் போல்குழலில் பாட்டிசைக்க
காற்றினிலே குழலசைய காதலில்ரா தைவருவாள்

----ஏற்கனவே ஆறு கலித்தளை அமையப் பெற்றிருக்கிறது
இன்னும் ஒன்று அமைய தரவு கொச்சகக் கலிப்பாவாகும்
ஆடுங்கள் என்பதை நிரை வருமாறு அசையுங்கள் என்று மாற்றினேன்
இபொழுது தரவு கொச்சகக் கலிப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (22-Dec-23, 8:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே