புத்தகம்

*********
தொட்டுப் படிக்கத் துணையாகும் புத்தகம்
விட்டு விடுதல் விபத்து
*
விபத்தாகத் தொட்டு விரிவாக நோக்க
அபகீர்த்தி மாற்றும் அது
*
அதுவிங்கு அஃறிணை ஆயினும் நம்மைப்
பொதுவாய் உயர்த்தும் புதிர்
*
புதிரென்று சொல்லும் புரியாத தற்கும்
பதில்சொல்லும் தேடிப் படி
*
படிப்பதற் கென்று படைப்பதின் மூலம்
படிக்கட் டெனவாகும் பார்
*
பாரெங்கும் புத்தகம் பல்லா யிரமுண்டு
யாரெங்கும் கற்றுய்ய யாத்து
*
யாத்தவர் கற்றறிந்த யாப்பின் படிநாளும்
பூத்திடும் புத்தகப் பூ
*
பூக்களில் தேனுண்டு பூப்பூவாய்த் தாவுகின்ற
ஈக்களையும் காட்டும் எழுத்து
*
எழுத்துகள் வாழ்கிற இல்லறமாய் மாற்றும்
பழுதில்லாப் புத்தகத்தின் பண்பு
*
பண்பிலை யாயினும் பட்டதாரி யாகியே
தொண்டுசெய்வாய்ப் புத்தகத்தைத் தொட்டு
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (26-Jan-24, 1:55 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 62

மேலே