குலோத்துங்க சோழன் கோவை - நூல் - மூன்றாவது - வன்புறை
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.
மூன்றாவது - வன்புறை.
அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்;
அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்;
அவை: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்றல் ஈறாகிய ஆறுவிரிகளையுடையன;
அவை வருமாறு:
அணிந்துழி நாணீயது உணர்ந்து தெளிவித்தல்.
பெருநயப் புரைத்தல்.
தெய்வத்திறம் பேசல்.
(இ-ள்) மேற்கூறியதைத் தலைவி தெளியாதவளாகத் தலைவன் அவளூழ் வலியின் றிறத்தைக் கூறுதல்.
கட்டளைக் கலித்துறை
விதியார் பிணைப்பப் பிணைந்தநங் கூட்டம் விலக்கவல்ல
மதியார் சிலருமிவ் வையத்துண் டோமண்டு காவிரிநன்
னதியாதி சங்கம ராச குலோத்துங்க னாகைவெற்பிற்
கதியான் மடவன்ன மேயென்ன மேனி கருகுவதே! 25